மாநில செய்திகள்

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection in 4 students

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவிகள் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அரசால் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி கலந்தாய்வின் தொடக்கமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு நாளை வரை நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவக்கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  நேற்று பங்கேற்ற 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.