தேசிய செய்திகள்

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை + "||" + Congress leader Rahul Gandhi pays tribute to former Prime Minister and his grandmother #IndiraGandhi at Indira Gandhi Memorial Museum, on her birth anniversary.

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை
இந்திராகாந்தியின் 103-வது பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.