மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் + "||" + Udayanidhi Stalin's first election campaign tour tomorrow

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.

இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றன. 

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை பிரசாரம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்  கைக்கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.