தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்வு + "||" + The rate of recovery from corona infection in India has risen to 93.58 per cent

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 576 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 89 லட்சத்து 58 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 83 லட்சத்து 83 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 303 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக, கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 585 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 131 பேரும், மராட்டியத்தில் 100 பேரும், மே.வங்கத்தில் 54 பேரும், உ.பி.யில் 29 பேரும், கேரளாவில் 28 பேரும்,அரியானாவில் 30 பேரும், சத்தீஸ்கரில் 23 பேரும், கர்நாடகாவில் 21 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12 கோடியே 85 லட்சத்து 8 ஆயிரத்து 389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 28 ஆயிரத்து 203 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி உயிரிழப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார்.
2. இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு
இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.