மாநில செய்திகள்

சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Chennai-Coimbatore Sadhapati Express canceled - Southern Railway notice

சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் இடையே, இரு மார்க்கங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் சதாப்தி ரெயில் சேவை ( Train No.06027 / 06028 ) இயக்கப்பட்டு வந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் போதிய டிக்கெட் முன்பதிவுகள் இல்லாததால் டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் நவம்பர் 30-ஆம் தேதி வரை இந்த ரெயில் சேவை இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.