மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy rain likely in 9 districts in Tamil Nadu in next 24 hours - Chennai Meteorological Center

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மதுரை, தேனி,  சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் 12 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம குன்னூரில் 9 செ.மீ., தேனி மாவட்டம் கூடலூர், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
3. தமிழகத்தில் நிவர் புயல், மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் இன்று வருகை
தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று வருகின்றனர். 4 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
4. தமிழகத்தில் 11 இடங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 11 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 42 இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.
5. தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.