கிரிக்கெட்

டெஸ்ட் போட்டி; காயத்திற்கு சிகிச்சை பெற தேசிய கிரிக்கெட் அகாடெமி வந்தடைந்த ரோகித் சர்மா + "||" + Test match; Rohit Sharma arrives at NCA for treatment of injury

டெஸ்ட் போட்டி; காயத்திற்கு சிகிச்சை பெற தேசிய கிரிக்கெட் அகாடெமி வந்தடைந்த ரோகித் சர்மா

டெஸ்ட் போட்டி; காயத்திற்கு சிகிச்சை பெற தேசிய கிரிக்கெட் அகாடெமி வந்தடைந்த ரோகித் சர்மா
டெஸ்ட் போட்டியில் விளையாட தயார்படுத்தி கொள்வதற்காக, காயத்திற்கு சிகிச்சை பெற ரோகித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு இன்று வந்தடைந்துள்ளார்.
பெங்களூரு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் (நவ.27, நவ.29, டிச.2) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் (டிச.4, டிச.6, டிச.8) விளையாடுகிறது. இந்த போட்டிகள் நிறைவடைந்ததும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 மாத கால சுற்றுப்பயணமாக கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.  அணி வீரர்கள் சிட்னி ஒலிம்பிக் பார்க் பகுதியில் உள்ள புல்மேன் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறையை முடித்ததும் சிட்னி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் கொரோனா தடுப்பு தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் கோலி அதன் பிறகு கடைசி கட்ட டெஸ்டுக்கான அணியுடன் இணைய வாய்ப்பில்லை.

அதே சமயம் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்தினால் ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி, ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி தீபாவளி பண்டிகை கழிந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இன்று காலை வந்தடைந்து உள்ளார்.  சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வந்துள்ளார்.  இதில் 100 சதவீதம் குணமடைவதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்படும்.

இதேபோன்று பி.சி.சி.ஐ. மருத்துவ குழுவும் ரோகித்தின் உடற்தகுதியை கண்காணிக்கும்.  அதுபற்றி அனைத்து இந்திய மூத்த தேர்வு குழுவுக்கும் விளக்கம் அளிக்கும் என பி.சி.சி.ஐ. அறிக்கை தெரிவித்திருந்தது.