உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் + "||" + Taliban terrorists attack residential area in Afghanistan

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக ஏவுகணைகளை கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
குண்டூஸ்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.  இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.  இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தஷ்த் இ ஆர்ச்சி மாவட்டம் மற்றும் குண்டூஸ் நகரில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கே குண்டூஸ் நகரில் தலோகா பகுதியில் வீடுகள் அமைந்த இடத்தில் தலீபான் பயங்கரவாதிகள் திடீரென சிறிய ரக ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  6 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  இதுபோன்ற வன்முறையானது ஏற்று கொள்ள முடியாதது என ஆப்கான் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.  எனினும் இந்த தாக்குதல் பற்றி தலீபான் அமைப்பினர் இன்னும் எதுவும் கூறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
2. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர்கள் 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேசிய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.