உலக செய்திகள்

கொரோனா தொற்று; ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒருவர் உயிரிழப்பு + "||" + Corona infection; One death every 17 seconds in European countries

கொரோனா தொற்று; ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்று; ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒருவர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டாக்ஹோம்,

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது.  எனினும், ஐரோப்பிய நாடுகள் மொத்த உலக பாதிப்பு எண்ணிக்கையில் 26 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளன.  இதுதவிர 26 சதவீதம் அளவுக்கு இந்த பகுதியில் பலியாகி உள்ளனர் என்ற எச்சரிக்கை அறிவிப்பு உலக சுகாதார அமைப்பு சார்பில் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் கிளூஜ் கூறும்பொழுது, ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றின் மையம் ஆகியுள்ளன.  கடந்த வாரம் ஐரோப்பிய மண்டலத்தில் 29 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதன்படி, ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒரு முறை ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார்.

கடந்த வாரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது என வருத்தமுடன் குறிப்பிட்டு உள்ளார்.  எனினும், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கைகளால் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிகுறிகள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குரோசிய பிரதமருக்கு 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
குரோசிய நாட்டு பிரதமருக்கு நடந்த 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர்.
3. இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்தது
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எண்ணிக்கை மொத்தம் 13 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
4. காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரிக்கு கொரோனா பாதிப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று; இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவர் கொரோனா தொற்றால் தனது 46 வயதில் உயிரிழந்து உள்ளார்.