உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் இருமும் காட்சி எடிட் செய்து மறைக்கப்பட்டது; புதிய சர்ச்சை + "||" + Russian President Putin health issue edited scene and hid it; New controversy

ரஷ்ய அதிபர் புதின் இருமும் காட்சி எடிட் செய்து மறைக்கப்பட்டது; புதிய சர்ச்சை

ரஷ்ய அதிபர் புதின் இருமும் காட்சி எடிட் செய்து மறைக்கப்பட்டது; புதிய சர்ச்சை
ரஷ்ய அதிபர் புதின் இருமும் காட்சியை தவிர்க்க வீடியோவை எடிட் செய்ய கட்டாயப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ்கோ,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 68) அந்நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகளை எதிர்கொள்ள போதிய நிதி வசதி இல்லாமை பற்றி தனது மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி வழியே ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் ரஷ்ய நிதி மந்திரி ஆன்டன் சிலுவானோவ் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்ட தொடக்கத்தில் புதினுக்கு திடீரென கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ந்து கடுமையான இருமல் ஏற்பட்டு உள்ளது.  இதனால், மன்னிக்கவும் என கூறிய புதின், தனது வலது கையை வாயருகே கொண்டு சென்று இருமலை தவிர்க்க முற்பட்டு உள்ளார்.

அவர் தனது பேச்சில், ஒரு வாக்கியம் முற்று பெறுவதற்கே கடுமையாக திணறியுள்ளார்.  எனினும், இதுபற்றிய வீடியோ பின்னர் எடிட் செய்யப்பட்டு உள்ளது.  இதனால், அவருக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் இல்லை என்பது போல் காட்டப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்நாட்டு செய்தி நிறுவனம் டாஸ், கிரெம்ளின் மாளிகை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதினின் உடல்நிலை பற்றி கேட்டுள்ளது.  ஆனால், அவர் முற்றிலும் நலமுடன் உள்ளார் என பதில் கிடைத்துள்ளது.

இதனால், புதினுக்கு உடல்நல பாதிப்புகள் இல்லை என மறுப்பு தெரிவிக்க கிரெம்ளின் மாளிகை கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது.

உலக நாட்டு தலைவர்களான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், புதின் இந்த பாதிப்பில் சிக்காமல் நீண்டகாலம் தவிர்த்துள்ளார் என நம்பப்பட்டு வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், பார்க்கின்சன் வியாதியால் வருகிற 2021ம் ஆண்டுடன் புதின் தனது பதவியில் இருந்து விலக கூடும் என வெளியான தகவலை கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பு அதிகாரி டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் அழுகிய உடல்களை வேனில் ஏற்றும் வீடியோவால் புதிய சர்ச்சை
மேற்கு வங்காளத்தில் அழுகிய நிலையில் இருந்த உடல்களை வேனில் எடுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.