உலக செய்திகள்

சமோவா நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு; அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள் + "||" + Corona impact for the first time in Samoa; PM request to keep the peace

சமோவா நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு; அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்

சமோவா நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு; அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்
பசிபிக் நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏபியா,

பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.  சிறிய நாடான் இதன் பிரதமராக துய்லீபா செய்லிலே மலியெலிகாவோய் இருந்து வருகிறார்.

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தபோதிலும், தீவு நாடான சமோவாவில் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.  இதேபோன்று கிரிபாட்டி, மைக்ரோனேசியா, நாவ்ரு, பலாவ், டோங்கா மற்றும் துவாலு உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்புகள் இல்லை.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலேயே தொற்றுகள் அச்சுறுத்தி வரும் சூழலில் வடகொரியா, துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தங்களுடைய நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புகள் இல்லை என கூறி வருகின்றன.

இந்த நிலையில், சமோவா நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியே நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் துய்லீபா, பொதுமக்கள் அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.

எனினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளும்படியும், தொடர்ந்து கண்காணிப்புடன் இருக்கும்படியும் கேட்டு கொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் நியூசிலாந்து நாட்டில் இருந்து விமானம் வழியே வந்துள்ளார்.  அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என பிரதமர் தெரிவித்து உள்ளார்.  அந்நபர் வந்தபின் 4 நாட்கள் கழித்து பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  ஆனால், இரண்டாவது பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது என கூறுகிறார்.

இதுபற்றி அமைச்சரவை கூடி நடப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பர் 3 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம்
டிசம்பர் 3 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்படு உள்ளது.
2. டிசம்பர் 2 ந்தேதி : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம்
டிசம்பர் 2 ந்தேதி :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகளால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை
பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகள் குழுவால் குறிவைக்கப்படலாம் சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 94.62 லட்சம் கடந்தது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளால் 482 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. நவம்பர் 30 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் வருமாறு
நவம்பர் 30 அன்று தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு,குணமானவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.