மாநில செய்திகள்

லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + MK Stalin mourns soldier killed in Ladakh crash

லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

காஷ்மீரின் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (34) உயிரிழந்தார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். 

காஷ்மீரின் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி இன்று காலை நடந்த விபத்தில் மரணமடைந்தார். இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரில், “இராணுவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி, லடாக் பகுதியில் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம். தியாக வீரரைத் தந்த குடும்பத்தாருக்கு என் ஆறுதல்!” என்று பதிவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம்; பா.ஜ.க. எம்.பி.யின் பேத்தி உயிரிழப்பு
பா.ஜ.க. எம்.பி. ரீட்டா பகுகுணாவின் 8 வயது பேத்தி தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.
2. ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரில் தூங்கிய நபர் உயிரிழப்பு
ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரிலேயே தூங்கிய நபர் உயிரிழந்து உள்ளார்.
3. கர்நாடகத்தில் புதிதாக 9,058 பேருக்கு கொரோனா பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 135 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 9,058 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. மேலும் 125 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரேநாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. 32 டாக்டர்கள் கொரோனாவால் உயிரிழப்பு: இந்திய மருத்துவ சங்கம் தகவல்
32 டாக்டர்கள் கொரோனாவால் இறந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.