தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 7,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Delhi's coronavirus tally crosses 5.10 lakh; death toll reaches 8,041

டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 7,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 7,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 6,685 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் முதலில் கொரோனா பாதிப்பு குறைந்த அளவிலே இருந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 7,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,10,630 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,041 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,685 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,59,368 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 43,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி(நாளை) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை
டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
5. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது - சித்தராமையா கருத்து
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.