உலக செய்திகள்

ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் + "||" + Pakistan's anti-terror court sentences JuD chief Hafiz Saeed to 10 years in jail in two more cases

ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம்

ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம்
பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
லாகூர்,

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியத் தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹபீஸ் சயித்துடன் சேர்த்து ஐமாத் உத் அவா அமைப்பின் தலைவர்கள் மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜமாத் உத் அவா ஒரு தீவிரவாத அமைப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் ஏற்கெனவே பிரகடனம் செய்தன. இதன் அடிப்படையில்தான் ஹபீஸ் சயீத்தின் அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், ஹபீஸ் சயீத் மற்றும் ஜமாத் உத் அவா மீது பாகிஸ்தான் அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து லாகூரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் இரண்டு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஹபீஸ் சயீத் உதவியாளர்கள் இருவருக்கு சிறை தண்டனை: பாக். நீதிமன்றம் உத்தரவு
ஹபீஸ் சயீத் உதவியாளர்கள் இருவருக்கு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. ராணுவ ரகசியங்களை சி.ஐ.ஏ.வுக்கு விற்க முயற்சி; ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்க மத்திய உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
3. ஹபீஸ் சயீத் கூட்டாளிக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் 32 ஆண்டு சிறை
ஹபீஸ் சயீத் கூட்டாளி யாஹ்யா முஜாகித்துக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
4. விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கு; சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.