தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் + "||" + Ahmedabad Imposes Night Curfew From 9 pm To 6 am Amid Rising Covid Cases

கொரோனாவை கட்டுப்படுத்த அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்த அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அகமதாபாத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
அகமதாபாத்,

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைய தொடக்கிய பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. அங்கு புதிதாக உருவாகும் நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அகமதாபாத் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அகமதாபாத் மாநகராட்சி முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.