தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு + "||" + Covid-19: Centre rushes high-level teams to 4 states to strengthen surveillance, testing

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் அண்டை மாநிலங்களில் சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு மத்திய குழுக்களை அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, டெல்லி எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, அரியானா மாநிலத்துக்கு செல்கிறது. நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான குழு ராஜஸ்தானுக்கும், டாக்டர் எஸ்.கே.சிங் தலைமையிலான குழு, குஜராத்துக்கும், டாக்டர் எல்.சுவஸ்திசரண் தலைமையிலான குழு மணிப்பூருக்கும் செல்கிறது.

அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிறைந்த மாவட்டங்களுக்கு சென்று, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு இக்குழுக்கள் ஆலோசனை வழங்கும்.