தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் + "||" + Byepoll For Ram Vilas Paswan Rajya Sabha Seat On Dec. 14

ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல்
ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி, 

மத்திய மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் 8-ந் தேதி காலமானார். அவர் பீகாரில் இருந்து கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. போட்டி இருக்கும்பட்சத்தில், டிசம்பர் 14-ந் தேதி தேர்தல் நடந்து அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல்
ஏ.ஆர்.ரகுமானின் தாயாரின் மறைவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2. அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3. எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. வடிவேல் பாலாஜி மறைவுக்கு கார்த்தி, தனுஷ் இரங்கல்
வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவுத்துள்ளனர்.
5. எச்.வசந்தகுமார் எம்.பி. மறைவு: நாகர்கோவில், கருங்கலில் மவுன ஊர்வலம் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
எச்.வசந்தகுமார் எம்.பி. மறைவையொட்டி நாகர்கோவில் மற்றும் கருங்கலில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.