மாநில செய்திகள்

மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு + "||" + Allocation of First Class Boxes for Women in Metro Rail - Metro Rail Company Announcement

மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு

மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்கள் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை, 

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எப்போதும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கி வருகிறது. பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க பல முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சென்னை மெட்ரோ ரெயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் பெண்கள் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெண்களுக்கு என்று தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்க தடை, புகை பிடிப்பதற்கு தடை மற்றும் பிற இடையூறுகளில் இருந்து பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.