உலக செய்திகள்

இலங்கையில் சிக்னல்களில் பிச்சை எடுத்தால் தண்டனை: தொழிலாக செய்வதால் அதிரடி + "||" + Police to Crack Whip on "Fake Beggars" in Sri Lanka

இலங்கையில் சிக்னல்களில் பிச்சை எடுத்தால் தண்டனை: தொழிலாக செய்வதால் அதிரடி

இலங்கையில் சிக்னல்களில் பிச்சை எடுத்தால் தண்டனை: தொழிலாக செய்வதால் அதிரடி
இலங்கையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கொழும்பு,

நகரத்தின் முக்கிய இடங்களிலும், சாலை சிக்னல்களிலும் பலர் பிச்சை எடுப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் மீது பரிதாபம் கொண்டு பலரும் உதவி வருகிறார்கள். ஆனால் இப்படி பிச்சையெடுப்பது ஒரு தொழிலாக இருக்கிறது என்ற அதிரவைக்கும் உண்மை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

“போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேபோல சிக்னல் பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று போலீஸ் உயர் அதிகாரி அஜித் ரோஹனா கூறி உள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான பிச்சைக்காரர்கள் கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பலர் பிச்சை எடுப்பதும், அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும் சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை. இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.