மாநில செய்திகள்

ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் + "||" + Information that Stalin was about to begin his campaign

ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல்

ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல்
தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளநிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமை இல்லாத முதல் தமிழக தேர்தல் களம் என்பதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் களப்பணிகளில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க.விலும் தேர்தலையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். 

இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் பிரசாரம் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மாவட்டங்கள் அல்லது திருவாரூரில் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து இன்று உதயநிதியும், வரும் 29-ம் தேதி கனிமொழியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.