சினிமா செய்திகள்

பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் + "||" + 30 years of Jail for a man who never committed the crime karthik subbaraj

பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் சிந்தியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  டுவிட்டர் பதிவில்,

ஒரு குற்றமும் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்... பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.