மாநில செய்திகள்

வீடியோ கான்பரன்ஸில் நெரிசல்: அரியர் தேர்வு வழக்கு விசாரணை நிறுத்தம் + "||" + Ariyar exam case trial suspended

வீடியோ கான்பரன்ஸில் நெரிசல்: அரியர் தேர்வு வழக்கு விசாரணை நிறுத்தம்

வீடியோ கான்பரன்ஸில் நெரிசல்: அரியர் தேர்வு வழக்கு விசாரணை நிறுத்தம்
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு விசாரணையின் போது காணொலியில் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.
சென்னை,

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யூஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. எனவே அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் விசாரணையில் லாக் கின் செய்ததால் இடையூறு ஏற்பட்டது.

இதனால் வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டது. மாணவர்களின் பேச்சு.ஒலி உள்ளிட்ட காரணங்களால் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

100க்கும் மேற்பட்டோர் வந்ததால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அதிருப்தி அடைந்தனர்.  விசாரணையில் இருந்த நீதிபதிகள்,  காணொலியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிடில் கடும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

வீடியோ கான்பரன்ஸிங்கில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் யாரும் வெளியேறாததால் ஒவ்வொருவராக நீக்கப்பட்டனர்.