உலக செய்திகள்

அமெரிக்காவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம் - 7 லட்சம் பேர் வேலையிழப்பு + "||" + Rising unemployment in the United States - 7 lakh people lose their jobs

அமெரிக்காவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம் - 7 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம் - 7 லட்சம் பேர் வேலையிழப்பு
அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது.
வாஷிங்டன்,

சீனாவில் தோன்றிய கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்க வல்லரசைத்தான் அதிகமாக தாக்கி வருகிறது. உலகிலேயே அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா தொடர்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் முதல் சில்லரை வர்த்தக அலுவலகங்கள் வரை மூடப்பட்டு உள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தன் அன்றாட வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். 

கடந்த வார இறுதியில் 7 லட்சத்து 11 ஆயிரம் பேர் வேலை இழந்து இருந்த நிலையில் அது தற்போது 7 லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் வரும் டிசம்பர் மாதம் வேலையிலா திண்டாட்டத்தால் 12 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வல்லரசு நாடான அமெரிக்காவில் நிலவும் இச்சூழல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை ஒன்று பிறந்தது.
2. அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்குகிறார், ஷாருக்கான்
அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை இந்தி நடிகர் ஷாருக்கான் வாங்குகிறார்.
3. அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
4. அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிறுவப்பட்ட உலோக தூண் திடீர் மாயம்
அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் திடீர் மாயமாகி உள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.