தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு: சோனியாகாந்தி டெல்லியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல் + "||" + Sonia Gandhi advised to briefly shift out of Delhi in view of her chronic chest infection: Sources

காற்று மாசுபாடு: சோனியாகாந்தி டெல்லியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்

காற்று மாசுபாடு: சோனியாகாந்தி டெல்லியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்
உடல்நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கிடையே மார்புத் தொற்று ஏற்பட்டதால் சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் சோனியா காந்திக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் உடல்நலனை கருத்தில் கொண்டு நாள்பட்ட மார்புத்தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

டெல்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு சோனியா காந்தி தங்குவார் என்றும் கூறப்படுகிறது. இன்று பிற்பகலில் டெல்லியிலிருந்து வெளியேறி ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் சோனியா செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.