தேசிய செய்திகள்

காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது - டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் + "||" + There's no harm in wearing a mask inside the car also,Delhi Health Minister Satyendar Jain

காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது - டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின்

காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது - டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின்
காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது என்று டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில்  கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று மேலும் 7,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,10,630 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் கொரோனா பரவல்  காரணமாக பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த அபராத தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் முகக்கவசம் தொடர்பாக டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் இன்று கூறுகையில், "முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது தொடர்பான உத்தரவு நகல் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுவிடும். வீட்டிலிருந்து வெளியில் இறங்கும்போதே முகக்கவசத்துடன் வருவதை மக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது.

இன்று முதல், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிகுறி உடையவர்கள் கண்டறியும் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறினார்.