தேசிய செய்திகள்

தங்கம் கடத்தல் வழக்கு: கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவசங்கர் மனு தாக்கல் + "||" + Kerala Gold Smuggling Case: Former principal secretary of Kerala CM, M Sivasankar approaches Kerala High Court seeking bail in the case registered

தங்கம் கடத்தல் வழக்கு: கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவசங்கர் மனு தாக்கல்

தங்கம் கடத்தல் வழக்கு: கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவசங்கர் மனு தாக்கல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்.

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் தூதரகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் உதவியதாக முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கரையும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தற்போது சிவசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் சிவசங்கரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா அலுவலகத்தில் சுங்கத்துறை திடீர் சோதனை - 3 மணி நேரம் நடந்தது
தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் பணிபுரிந்த அலுவலகத்தில் சுங்கத்துறையினர் 3 மணி நேரம் திடீர் சோதனை நடத்தினார்கள்.