மாநில செய்திகள்

லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் + "||" + Chief Minister Palanisamy pays condolences to the family of Karuppasamy, a Thoothukudi soldier who died in an accident on the Ladakh border

லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மறைந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி (த/பெ. திரு. கந்தசாமி) என்பவர் 18.11.2020 அன்று எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே லடாக் பகுதியில்  உயிரிழந்த கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு அமைச்சர்  கடம்பூர் ராஜு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி, அவரது குடும்பத்திற்கு தேவையான முழு உதவி அரசு தரப்பில் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.