உலக செய்திகள்

ராணுவ ரகசியங்களை சி.ஐ.ஏ.வுக்கு விற்க முயற்சி; ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை + "||" + Attempt to sell military secrets to CIA; Russian sentenced to 13 years in prison

ராணுவ ரகசியங்களை சி.ஐ.ஏ.வுக்கு விற்க முயற்சி; ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை

ராணுவ ரகசியங்களை சி.ஐ.ஏ.வுக்கு விற்க முயற்சி; ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்க மத்திய உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மாஸ்கோ,

ரஷ்யாவின் பாதுகாப்பு பிரிவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பணியாற்றியவர் யூரி அலெக்சாண்ட்ரோவிச் எஸ்செங்கோ.  நார்தர்ன் பிளீட் கப்பல்களின் ரேடியோ மின்னணு சாதனங்களை பராமரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய யூரி, நார்தர்ன் பிளீட் பயன்படுத்தும் ஆயுதங்கள் தொடர்புடைய ரகசிய ஆவணங்களை நகல் எடுத்து அமெரிக்காவுக்கு சில காரணங்களுக்காக விற்க முயன்றுள்ளார்.

அவர் கடந்த 2019ம் ஆண்டில், அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்புடன் (சி.ஐ.ஏ.) தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்.  கடந்த ஜூலையில் சி.ஐ.ஏ.விடம் ராணுவ ரகசியங்களை அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து அவர், உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லையையொட்டிய ரஷ்யாவின் மத்திய பிரையான்ஸ்க் பகுதியில் வைத்து பிடிபட்டார்.

யூரி குற்றம் செய்தது பற்றி ஒப்பு கொண்டுள்ளார் என ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த 17ந்தேதி பிரையான்ஸ்க் மண்டல நீதிமன்றம், யூரி உயரிய தேசதுரோகம் செய்துள்ளார் என கண்டறிந்தது.  இதனை தொடர்ந்து அவரை உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கும்படியும், 13 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம்
பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2. விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கு; சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.