தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,608- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Delhi reports 6,608 new COVID-19 cases (out of 62,425 tests), 8,775 recoveries, and 118 deaths, according to Delhi Health Department

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,608- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,608- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை வீசுவதாக கூறப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  கெஜ்ரிவால் அரசு முடுக்கி விட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,608- பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 8,775- பேர் குணம் அடைந்த நிலையில் 40,936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா வைரஸ் பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை   8,159 ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட மந்திரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார்.
2. ஆந்திராவில் புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் இன்று புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் புதிதாக 5,229- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் இன்று புதிதாக 5,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு: மேலும் 5,376 பேருக்கு தொற்று உறுதி; 31 பேர் பலி
கேரளாவில் இன்று மேலும் 5,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 3,246 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.