தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விவகாரம்: நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை + "||" + PM Modi Holds Meet To Review India's Covid Vaccination Strategy

கொரோனா தடுப்பூசி விவகாரம்: நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

கொரோனா தடுப்பூசி விவகாரம்: நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கினாலும், 2-வது அலை பரவி மீண்டும் தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டிவிடுமோ? என்பது மக்களின் அச்சமாக உள்ளது. எனவே, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

 உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசிக்கான சோதனை நடந்து வருகிறது.  பைசர், மாடர்னா, பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. பைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்கள் கொரோனா சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஒப்புதல் பெறுவதற்காக திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக், மருத்துவ குழு,  தடுப்பூசி ஆராய்ச்சி குழு என்று பல்வேறு குழுவுடன் மோடி ஆலோசனை செய்தார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: -இன்று கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிடுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  தடுப்பூசி  உற்பத்தி, அனுமதி, கொள்முதல் குறித்து ஆலோசனை செய்தேன்” என்று பதிவிட்டுள்ளார

தொடர்புடைய செய்திகள்

1. முதற்கட்டமாக ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும் முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதார அமைச்சர் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
2. மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும்; பிரதமர் மோடி தகவல்
மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
3. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவில் தொடங்கும் - பிரதமர் மோடி
முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
4. புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை ; அடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த 3 நாட்களுக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. புரெவி புயல் : தூத்துக்குடியில் கன மழை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்- கலெக்டர் அறிவுரை
புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் கன மழை பெய்யும். மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் கூறி உள்ளார்.