உலக செய்திகள்

பயணிகள் சிலருக்கு கொரோனா: ஏர் இந்தியா விமானங்களுக்குத் தடை விதித்தது ஹாங்காங் + "||" + Hong Kong bans Air India flights for fifth time after passengers test COVID-19 positive

பயணிகள் சிலருக்கு கொரோனா: ஏர் இந்தியா விமானங்களுக்குத் தடை விதித்தது ஹாங்காங்

பயணிகள் சிலருக்கு கொரோனா: ஏர் இந்தியா விமானங்களுக்குத் தடை விதித்தது ஹாங்காங்
ஏர் இந்தியா விமானங்களுக்கு 5 முறையாக இத்தகைய தடைகளை ஹாங்காங் விதித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர் பப்பிள்’ முறையில் வெளிநாடுகளுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஹாங்காங் - டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதன்படி,  ஹாங்காங் - டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள், பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே  பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்தியா தவிர, வங்காள தேசம், எத்தியோப்பியா, பிரான்சு, இந்தோனேசியா, கஸ்கஸ்தான்,நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், டெல்லி - ஹாங்காங் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து ஹாங்காங் வந்திறங்கிய பயணிகளில் சிலருக்கு  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அதாவது வரும்  டிசம்பர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள்,ஹாங்காங் சேவையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  கொரோனா காலத்தில் ஏர் இந்தியா விமானங்களுக்கு  5 முறையாக இத்தகைய தடைகளை ஹாங்காங் விதித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.