உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம் + "||" + Pfizer, BioNTech plan emergency move to use Covid-19 vaccine in December

கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்
அமெரிக்காவின் பைசர் என்கிற நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் பைசர் என்கிற நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என பைசர் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில் தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கோரியுள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி பெற முடியும் என பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகளால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை
பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகள் குழுவால் குறிவைக்கப்படலாம் சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்குகிறார், ஷாருக்கான்
அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை இந்தி நடிகர் ஷாருக்கான் வாங்குகிறார்.
3. அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
4. அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிறுவப்பட்ட உலோக தூண் திடீர் மாயம்
அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் திடீர் மாயமாகி உள்ளது.
5. கொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.