உலக செய்திகள்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன் + "||" + China will have to play by rules; US to rejoin WHO: Joe Bide

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவி ஏற்கும் முதல் நாளில் அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இணையும் என ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.
வாஷிங்டன், 

கடந்த 3-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் சீனா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேசமயம் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அமெரிக்கா-சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.

அதே போல் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சீனாவுடனான உறவு குறித்தும் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையுமா என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜோ பைடன் பதில் அளித்து பேசியதாவது:-

சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும்.

அதேபோல் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவது உறுதி. நான் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேர போகிறோம். அதேசமயம் அதில் சில சீர்திருத்தங்களும், ஒப்புதல்களும் தேவைப்படுகிறது. அதேபோல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும் இணையும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிர்வலைகளை ஏற்படுத்தும் அமெரிக்க அரசியல் :நிதி முறை கேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்காவிடம் நிதி முறை கேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2. அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை ஒன்று பிறந்தது.
3. அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்குகிறார், ஷாருக்கான்
அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை இந்தி நடிகர் ஷாருக்கான் வாங்குகிறார்.
4. அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
5. அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிறுவப்பட்ட உலோக தூண் திடீர் மாயம்
அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் திடீர் மாயமாகி உள்ளது.