உலக செய்திகள்

ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் + "||" + Indian-American Mala Adiga appointed as Jill Biden's policy director

ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம்

ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம்
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,

ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜோ பைடன், அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருக்கும் அவரது மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மாலா அடிகா ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக, மாலா அடிகா, ஜோ பைடன் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பங்களுக்கான இயக்குநராகவும் இருந்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் போது, கல்வி மற்றும் கலாச்சார விவகார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக மாலா அடிகா பணியாற்றி உள்ளார். உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான மாநில அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.   இல்லினாய்சை பூர்வீகமாகக் கொண்ட மாலா அடிகா, கிரின்னல் கல்லூரி, மினசோட்டா பொது சுகாதாரப் பள்ளி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர் ஆவர். 2008 இல் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரச்சாரத்தில் சேருவதற்கு முன்பு சிகாகோ சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஒபாமா நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலுக்கான ஆலோசனையாகத் தொடங்கினார்.

முன்னதாக வெள்ளை மாளிகையின் மூத்த ஊழியர்களில் நான்கு புதிய உறுப்பினர்களின் நியமனம் குறித்த அறிவிப்பை ஜோ பைடன் நேற்று வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. செல்ல பிராணியுடன் விளையாடிய போது விபரீதம்: அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் காயம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனால்டு டிரம்ப்
ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ஜோ பைடன் பலவீனமானவர்; போர் குறித்தும் பரிசீலிக்கலாம் : சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் ஒருவர் கூறி உள்ளார்.
4. ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு?
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.