தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்று மேலும் 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + A further 46,232 people in India were confirmed to be affected by corona today

இந்தியாவில் இன்று மேலும் 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் இன்று மேலும் 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா  தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,50,598 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 49,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,39,747 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 13 கோடியே 06 லட்சத்து 57 ஆயிரத்து 808 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,66,022 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார்.
3. 2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
5. வியட்நாமின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்க இந்தியா உதவி அளிக்க உறுதி
வியட்நாமின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் இந்தியா உதவி வழங்குவதை உறுதிப்படுத்தி உள்ளது.