மாநில செய்திகள்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார் + "||" + Removed from DMK, Former MP KP Ramalingam joins BJP

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, 

தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் கே.பி இராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். 

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும், 144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் கே.பி இராமலிங்கம் கருத்து தெரிவித்தார். இதனால்,  எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வர உள்ளநிலையில், அவரையும் கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. "திமுக, அமமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர்" - அமைச்சர் ஜெயக்குமார்
திமுக, அமமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது ஏன்? மு.க ஸ்டாலின் பேட்டி
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
4. மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக கிராம சபை கூட்டத்தில் பெண்ணால் சலசலப்பு ; திமுக- அதிமுக போட்டி சாலை மறியல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுப்பிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திமுக அதிமுக போட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. திமுக இன்று நடத்த இருக்கும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
திமுக இன்று நடத்த இருக்கும் கிராம சபை கூட்டத்திற்கு மறுப்பு தெரிவித்து மரக்காணம் காவல் ஆய்வாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை