மாநில செய்திகள்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார் + "||" + Former MP fired from DMK KP Ramalingam joined the BJP.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சென்னை, 

மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும், 144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் கே.பி இராமலிங்கம் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கே.பி.ராமலிங்கத்துக்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்..

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “கே.பி.ராமலிங்கத்தின் வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம்” என்று கூறினார். 

அவரைத்தொடர்ந்து பேசிய கே.பி.ராமலிங்கம், “மு.க.அழகிரியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளேன். அவரையும் பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன். கருணாநிதிக்குப் பிறகு வேறு ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.