மாநில செய்திகள்

நாகை துறைமுகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது + "||" + DMK Youth Secretary Udayanithi Stalin arrested at Nagai Port

நாகை துறைமுகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது

நாகை துறைமுகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது
நாகை துறைமுகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்,

நாகை துறைமுகத்தில் படகில் ஏறி பிரசாரம் மேற்கொண்டு திரும்பிய போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், நாகை மாவட்டம், திருக்குவளையில் இருந்து, நேற்று முதல் பிரசாரம் துவங்க, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி திட்டமிட்டிருந்தார். பிரசாரம், வரும் மே மாதம் வரை, 100 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று மாலை திருக்குவளையில், பிரசாரம் துவங்க இருந்தது. தஞ்சை டி.ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி,க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் என, 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

நேற்று மாலை அங்கு வந்த உதயநிதி, கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார். பிரசாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், அவரை கைது செய்வதாக கூறினர். தொண்டர்கள் கூச்சலிட்டு, உதயநிதியை கைது செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். இதனால், போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், உதயநிதி மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்துக்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.