தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாஜக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு + "||" + Union Home Minister Amit Shah arrived in Tamil Nadu - Chief Minister, Deputy Chief Minister and senior BJP executives gave an enthusiastic welcome
தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாஜக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாஜக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை,
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே அமித்ஷாவின் வருகையையொட்டி 14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க் கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.