சினிமா செய்திகள்

போதை பொருள் பறிமுதல்; நடிகை பாரதி சிங், கணவர் விசாரணைக்கு ஆஜர் + "||" + Drug seizures; Actress Bharti Singh, husband appeared for trial

போதை பொருள் பறிமுதல்; நடிகை பாரதி சிங், கணவர் விசாரணைக்கு ஆஜர்

போதை பொருள் பறிமுதல்; நடிகை பாரதி சிங், கணவர் விசாரணைக்கு ஆஜர்
வீட்டில் நடந்த சோதனையில் போதை பொருள் பறிமுதல் செய்த நிலையில் என்.சி.பி. அலுவலகத்தில் நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளனர்.
புனே,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்புடைய வழக்கு விசாரணையை அடுத்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இந்த நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்புடைய வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் இரண்டு பணியாளர்கள் மற்றும் சிலர் உள்ளிட்டோர் சுஷாந்துக்கு போதை பொருள் வினியோகம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதுபற்றிய வாட்ஸ்அப் உரையாடல்கள் ரியாவின் போனில் இருந்தன.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.  நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் ஜாமீன் பெற்று ரியா விடுதலையானார்.

இதேபோன்று போதை பொருள் வழக்கு ஒன்றில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவி ஷபானா சயீத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த 8ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு முன் மும்பையில் உள்ள அவர்களது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அதில், 10 கிராம் அளவுக்கு மாரிஜுவானா என்ற போதை பொருள் அதிகாரிகளிடம் சிக்கியது.  இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவை விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பி, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் பிரோசின் மனைவி ஷபானா, ரூ.15 ஆயிரம் தனிநபர் பிணை தொகை செலுத்தி ஜாமீன் பெற்று கொள்ள மும்பை நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில், தில் ஹை தும்ஹாரா, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்தி திரைப்பட நடிகர் அர்ஜுன் ராம்பாலின் மும்பை வீட்டில் கடந்த 9ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் சில மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதனை தொடர்ந்து ராம்பாலின் காதலியான கேப்ரியல்லாவிடம் அதிகாரிகள் கடந்த 12ந்தேதி 6 மணிநேரம் விசாரணை நடத்தினர்.  இதேபோன்று இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.  அவர் கடந்த 13ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.  இதில், அவரிடம் 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தி படங்களில் நடித்துள்ள, நடிகை பாரதி சிங் வீட்டில் இன்று காலை போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இதில் அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாசியா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் அழைத்தனர்.  இதன்படி, அதிகாரிகளின் வெள்ளை நிற வேனில் ஹர்ஷ் மற்றும் சிவப்பு நிற மெர்சிடிஸ் ரக வாகனத்தில் பாரதி சிங்கும் ஏறி என்.சி.பி. அலுவலகத்திற்கு சென்றனர்.

இதுபற்றி போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளில் ஒருவர் கூறும்பொழுது, போதை பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் நடந்த விசாரணையில் பாரதி சிங்கின் பெயர் வெளிவந்தது.  இதன் தொடர்ச்சியாக அவரது வீட்டில் நடந்த சோதனையில் சிறிய அளவிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.  வேறு இரு இடங்களிலும் எங்களுடைய அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்; நபர் கைது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 கிலோ வெடிபொருட்களை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
2. ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது
ஐதராபாத் நகர போலீசார், 4 நபர்களிடம் இருந்து ரொக்கப் பணமாக ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்தை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
3. கேரளாவில் 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பறிமுதல்; அமலாக்க அதிரடி படை நடவடிக்கை
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அமலாக்க அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
4. மராட்டியத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
மராட்டியத்தின் நவிமும்பை நகரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
5. பெங்களூருவில் ரூ.30 லட்சம் தடை செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது
பெங்களூருவில் ரூ.30 லட்சம் தடை செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.