உலக செய்திகள்

அமெரிக்காவில் புதிய உச்சம்; 1.94 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி + "||" + New peak in the US; 1.94 lakh people were confirmed to be affected by corona in a single day

அமெரிக்காவில் புதிய உச்சம்; 1.94 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி

அமெரிக்காவில் புதிய உச்சம்; 1.94 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் 1.94 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்கா உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ளது.  அந்நாட்டில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று வரை 1 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 396 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.  இதன்படி, 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வாரத்தில் சராசரியாக இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 272 ஆக இருந்தது.  இது அதற்கு 2 வாரங்களுக்கு முன் காணப்பட்ட சராசரியை விட 73 சதவீதம் அதிகம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 5,229- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் இன்று புதிதாக 5,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு: மேலும் 5,376 பேருக்கு தொற்று உறுதி; 31 பேர் பலி
கேரளாவில் இன்று மேலும் 5,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 3,246 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,375 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 5,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.39 கோடியாக உயர்ந்துள்ளது.