தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்தது + "||" + The number of corona infection tests in India has crossed 13 crore

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்தது

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்தது
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எண்ணிக்கை மொத்தம் 13 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரசுக்கான பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.  இதன்படி, இந்தியாவில் கொரோனா வைரசுக்கான பரிசோதனை எண்ணிக்கை மொத்தம் 13 கோடியை கடந்துள்ளன.

இவற்றில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.  எனினும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த விகிதத்துடன் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று வரையிலான கணக்கீடுகளின்படி, 13 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 22 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன என்று தெரிவித்து உள்ளது.  எனினும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது பற்றிய அறிவிப்பு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குரோசிய பிரதமருக்கு 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
குரோசிய நாட்டு பிரதமருக்கு நடந்த 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர்.
3. கொரோனா தொற்று; ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒருவர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரிக்கு கொரோனா பாதிப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று; இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவர் கொரோனா தொற்றால் தனது 46 வயதில் உயிரிழந்து உள்ளார்.