மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது உதவிகள் அல்ல உரிமைகள்; அமித்ஷா பேச்சு + "||" + The Central Government did not provide assistance to TN but rights; Amitsha speech

தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது உதவிகள் அல்ல உரிமைகள்; அமித்ஷா பேச்சு

தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது உதவிகள் அல்ல உரிமைகள்; அமித்ஷா பேச்சு
தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்த திட்டங்கள் மற்றும் நிதிகள் ஆகியவை உதவி அல்ல என்றும் அவை மாநில உரிமைகள் என்றும் அமித்ஷா பேசியுள்ளார்.
சென்னை,

தமிழக அரசு சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வந்த அவரை முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து மறைந்த முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய மந்திரி அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.  இதன்பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்பொழுது, மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலங்களிடையே போட்டியிடும் தன்மை அதிகரித்து உள்ளது.  இந்த ஆண்டு சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் கிடைத்து உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டில் பாதுகாப்பு தொழிற்சாலைகள் அமைவதற்கான திட்டங்களை இரண்டு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் என மோடி அரசு அறிவித்து உள்ளது.  அவற்றில் ஒன்று தமிழகம்.

தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என தி.மு.க. தலைவர்கள் சில சமயங்களில் கூறியது பற்றி நான் கேள்விபட்டிருக்கிறேன்.  மத்தியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன.

தமிழகத்திற்கு அதிக உதவி கிடைத்தது அந்த 10 ஆண்டுகளிலா அல்லது எங்களுடைய அரசாட்சியிலா என்பது பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்திற்கு மத்திய அரசால் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிதிகள் ஆகியவை உதவி என்ற அர்த்தத்தில் அல்ல.  அவை தமிழகத்தின் உரிமைகள்.  தமிழகத்திற்கு அவை அளிக்கப்படாமல் இருந்தன.  தற்பொழுது, தமிழகம் தனது உரிமைகளை பெற்றுள்ளது என்பது மோடிஜியால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமித்ஷா பேசியுள்ளார்.