தேசிய செய்திகள்

அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் உடல் நிலை கவலைக்கிடம் + "||" + Former Assam CM Tarun Gogoi (in file pic) is on mechanical ventilation, incubated today evening on inotropic support.

அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் உடல் நிலை கவலைக்கிடம்

அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் உடல் நிலை கவலைக்கிடம்
அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,

அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய்( வயது 82)  கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த பிறகு, கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக , கடந்த 1 ஆம் தேதி மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில்,  தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.  

அசாம் சுகாதாரத்துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:  மெக்கானிக்கல் வெண்டிலேஷன் உதவியுடன்  தருண் கோகாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அடுத்த 48 முதல் 72 மணி நேரம்  மிக முக்கியமானது. சாத்தியமான அனைத்தையும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.