உலக செய்திகள்

தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வலுக்கும் போராட்டம் + "||" + Thai school students protest against ‘dinosaurs’

தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வலுக்கும் போராட்டம்

தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வலுக்கும் போராட்டம்
தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு அரசர் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாங்காக்,

தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு அரசர் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தி, ஏராளமான மாணவர்கள் தலைநகர் பாங்காக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவப் புரட்சி மூலம் பிரதமர் பதவியை கைப்பற்றிய பிரயூத் சான் ஒச்சா-வுக்கு (Prayuth Chan-ocha) எதிராக கடந்த ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் வலுத்துள்ளன.

தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு மேடை நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள், கல்வித் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருமாறு வலியுறுத்தினர்.

நான் ஆசிரியர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளேன். பள்ளி ஒரு பாதுகாப்பான இடம் அல்ல, என்று ஒரு மாணவர் சீருடையில் உட்கார்ந்து ஒரு வாசக அட்டையை வைத்துக்கொண்டு மவுனமாக எதிர்ப்புத் தெரிவித்தார்.