தேசிய செய்திகள்

ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்தது: பிரதமர் மோடி டுவிட் + "||" + "Had a very fruitful discussion with G20 leaders.

ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்தது: பிரதமர் மோடி டுவிட்

ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்தது: பிரதமர் மோடி டுவிட்
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு மெய்நிகர் முறையில் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி,

ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு மெய்நிகர் முறையில் இன்று நடைபெற்றது.  நடப்பு ஆண்டுக்கான கூட்டத்திற்கு சவுதி அரேபியா தலைமை வகித்தது. இந்தக் கூட்டத்தில் ஜி 20 கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். 

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில்,  துவக்க உரையாற்றிய சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்  சவுத், கொரோனாவுக்கு எதிரான மருத்துவ கருவிகள் குறைந்த மற்றும் சமமான முறையில் அனைவருக்கும் கிடைப்பதன் முக்கியத்துவம் பற்றியும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: -

ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை  பலனுள்ள வகையில் இருந்தது. மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள், பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரம் விரைவாக மீட்டெடுப்பதை முன்னெடுத்துச் செல்லும். மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டத்தை நடத்திய சவுதி அரேபியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும்; பிரதமர் மோடி தகவல்
மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
2. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவில் தொடங்கும் - பிரதமர் மோடி
முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
3. புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை ; அடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த 3 நாட்களுக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. புரெவி புயல் : தூத்துக்குடியில் கன மழை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்- கலெக்டர் அறிவுரை
புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் கன மழை பெய்யும். மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் கூறி உள்ளார்.
5. புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை
புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.