சினிமா செய்திகள்

'சசிகலா' எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கபோவதாக ராம்கோபால் வர்மா அறிவிப்பு! + "||" + The reason why SASIKALA will release on the same day as THALAIVI

'சசிகலா' எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கபோவதாக ராம்கோபால் வர்மா அறிவிப்பு!

'சசிகலா' எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கபோவதாக ராம்கோபால் வர்மா அறிவிப்பு!
இயக்குநர் ராம்கோபால் வர்மா அடுத்ததாக சசிகலா எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மும்பை,

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சசிகலா' என்கிற பெயரில் திரைபப்டம் எடுக்கபோவதாக அறிவித்து புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் வர்மா, "சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும் என டுவீட் செய்துள்ளார்.