உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி + "||" + Almost a million inoculated in China, Sinopharm

கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.
பீஜிங், 

கொரோனா வைரசை உலகமெங்கும் அளித்து, பெருத்த உயிர்ச்சேதத்துக்கும், பொருள் சேதத்துக்கும் காரணமாகி நிற்பது சீனாதான். இப்போது அந்த சீனாவே கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரித்து வியாபாரம் செய்யவும் எத்தனித்து கொண்டிருக்கிறது. இந்த வகையில், அங்கு 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக சீனாவின் தேசிய மருந்து நிறுவனமான சைனோ பார்ம், 2 தடுப்பூசிகளை உருவாக்கி பல நாடுகளில் சோதித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் சைனோபார்ம் நிறுவனம், தனது தடுப்பூசியை அரசு ஊழியர்கள், சர்வதேச மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு செலுத்தி வருகிறது என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சைனோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவசர பயன்பாடு என்ற வகையில் சோதனை ரீதியில் ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கு எங்கள் தடுப்பூசியை போட்டு இருக்கிறோம். இந்த தடுப்பூசியினால் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரு புகார் கூட இதுவரை வரவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் லேசான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், இந்த தடுப்பூசியின் செயல்திறனுக்கான எந்த தெளிவான மருத்துவ ஆதாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதால் அந்த நாடு உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சைனோ பார்ம் நிறுவனத்தை பொறுத்தமட்டில் 2 தடுப்பூசிகளை உருவாக்கி அதன் இறுதிக்கட்ட பரிசோதனையை ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து, ஜோர்டான், பெரு மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.47 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.48 கோடியாக அதிகரித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
3. பைசர் தடுப்பூசிக்கு அனுமதி: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக அப்பாவியாக நம்பாதீர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு -இறப்புகளில் முழுமையான தகவலை மூடிமறைத்த சீனா
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பில் சீனா முழுமையான தகவலை வெளியிடாமல் மூடிமறைத்துள்ள சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
5. 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா
தள்ளுபடி விலையை இந்தியாவில் வழங்குவதால் சீனா 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளனர்.