உலக செய்திகள்

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி + "||" + Seven die after drinking hand sanitiser when they ran out of booze at party in Russia

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி
அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது
மாஸ்கோ, 

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் சகா. அங்குள்ள டாட்டின்ஸ்கி என்ற மாவட்டத்தை சேர்ந்த சிலர் போதைக்காக மதுவுக்கு பதில் கிருமி நாசினியை குடித்தனர். 

அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.