உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டியது + "||" + US surpasses 12 million Covid-19 cases: Report

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்தை தாண்டியுள்ளது.
வாஷிங்டன்,

உலக வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா தொற்று பாதிப்பால் கதி கலங்கியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. 

அங்கு கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டும். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,375 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 5,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.39 கோடியாக உயர்ந்துள்ளது.
4. டெல்லியில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 3,726 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. கர்நாடகாவில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.